இணையற்ற வீர்ன் 79 ஆஹா! என்ன ஆச்சரியம் ! என்னையும் ஏய்த் தாளா? என்னைக் கொலை செய்யவும் சதி செய் தானா P [சுற்றுப்புறமாகப் பார்க்கிறான். காங்கேயன் சமீ பத்தில் 'யாரோ 'அண்ணா' என்று அழுவதைக் கவனிக்கிறான். சித்ரபானுவின் ஒரு பக்கத்து மீசை விழுந்துவிட்டதால் சந்தேகித்து அவன் களைகிறான். கழுத்தில் தாலி யுடன் சித்ரபாலுவைச் கண்டதும்] ஆணுடையைச் ப்ரகலசதன் கட்டிய தாலியா இது? என்னைக் கொல்லும்படி ஏவிய கடிதமா இது? [சித்சபானுவைக் குத்திக் கொல்லுதல். இச்சமயம் ஆரியர் பயந்து ஓட்டம் பிடித்தல். சேனாதிபதி கையிற் கட்டாளியுடன் டிக்குன்ன அலங்கோலக் காட்சியைக் கண்டு நிதானித்து] என்ன காரியம் செய்தேன்? முதலில் தான் சித்ரபானு என்னும் இச்சண்டாளியின் அழகில் ஆசையுற்றேன். அவன் அழகானது வஞ்சக ஆரியர் சூழ்ச்சிக்கு வாசற்படி என்பதை கான் கருதாமற் போனேன். அதனால் அவள் வலையிற் சிக்குண் டேன். பிறகு அவள் வார்த்தைக்குக் கட்டுப்பட் டேன். அவள் என்னைத் தன் கையில் அடக்கிக் கொண்டாள். 'இந்த ராஜ்யத்தை உனக்குப் பட்டம் சூட்டுகிறேன்' என்று சொன்னதினாலும், என்னை விவாகம் செய்துகொள்ளுகிறேன் என்று ஆசை காட்டியதாலும் அவள் கருத்தின்படி காரியம் செய்யவும் ஆரம்பித்தேன். இதற்கிடையில் என்
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை