பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 9 "ஏ நாய்க்குட்டிப் பயலே! எங்கே போய்விட்டாய்! சீக்கிரம் வாடா!" 'இதோ வந்துவிட்டேன்” என்று ஒரு குரல் கேட் கிறது. ஆஜானுபாகுவான ஒரு முரட்டு ஆள் உள்ளே யிருந்து வருகிறான். மரியாதையுடன் நிற்கிறான். அவன் கையிலே ஒரு வேல் கம்பு இருக்கிறது. அதில் சிறிய மணி கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவன் பணிவுடன் கேட்கிறான், அடியேன் என்ன செய்யவேண்டும்?" 'அதையும் சொல்லவேண்டுமா ! ஓலைகளை எடுத்துப் பையிலே போடு !" ஓலைகள் பையிலே போடப்பட்டுக் கின்றன. கட்டப்படு "பையின் கழுத்தில முத்திரையைப் போடு !" வேங்கைச் சின்னமிட்ட முத்திரை போடப்படுகிறது. 6 “உம்--தூ க்கிக்கொண்டு ஓடு !" அவன் பையைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான். e 'அடே! நாய்க்குட்டி !...பத்திரம் ! நூறு ஓலைகள் - ஐம்பது பொன்கள் ! இருட்டுவதற்குள் மாயனூர் போய் விட வேண்டும். இல்லாவிட்டால் வழியிலே எவனாவது திருடன் சுருட்டிவிடப் போகிறான். சரி! உத்திரவுப்படி ஓடுகிறேன் "உம்! ஓடு!.. ஆமாம்...குதிரை தயாராகிவிட்டதா! ...ஏ...முத்தா!... முடிந்ததா வேலை?" 66 'முடிந்துவிட்டது ! குதிரை தயார் !" என்று கூறிய படி முத்தன் வருகிறான். முத்தன்தான் முதலில் குதிரை