பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுகதேவ்: மு. கருணா நி தி 101 நான் என்ன ஆகவேண்டுமோ, தெரிய வில்லையே! அப்போது வேதாளம் அஞ்சல் ஓலைகளின் அடுக்குடன் அங்கு நுழைகிறான். வேதாளம்: நீங்கள் அடுத்த பாளையக்காரராக வேண் டும் - இதிலென்ன சந்தேகம்? சுகதேவ் : அடேடே! வேதாளமா?... நல்ல சமயத்தில் வந்தீரய்யா நாரதர் போல!- உட்காரும். வேதாளம்: என்ன ஆலோசனை பலமாக நடக்கிறது?... சுகதேவ்: எனக்கு ஏதாவது ஓலையுண்டா?... வேதாளம்: உண்டு உண்டு !... இதோ !... (ஒரு ஓலை யைக் கொடுக்கிறான்) சகதேவ்: உம்முடைய மூளையைப்பற்றி எனக்கு நிறைய நம்பிக்கை !... ஆகையால் இந்த முக்யமான நேரத்தில் ஒரு முதல் தரமான யோசனை சொல்லும். வேதாளம்: விஷயத்தைச் சொல்லாமல் யோசனை கேட் டால் எப்படித் தம்பி சொல்லுவது?. சுகதேவ்: இது தேவ ரகசியம்-நீர் யாரிடமும் சொல்லக் கூடாது! தெரியுமா? வேதாளம் : ரகசிய மென்றால் யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தெரியும். என்ன ரகசியம் என்பது தெரிய வேண்டுமே ! சுகதேவ்: திருசங்கு - நீர் பயப்படாதீர் - நான் சொல் கிறேன்! திருசங்கு: பயமொன்று மில்லை. சொல்லுங்கள். 7