பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

55 மு. கருணாநிதி கோலாகாலம் ! கொண்டாட்ட வாத்தியம்! கும்மாளம்/ குதூகலம் / அனைத்தையும் காதில் வாங்கியபடியே அங்கே யொருவன் கிடக்கிறான். கடுமையான தண்டனைக்கு உட்பட்டு! "முத்தாயி! முத்தாயி!" என்று அவன் வாய் புலம்பியபடியிருக்கிறது. தளபதியின் இருப்பிடத் திற்கு அருகாமையிலே-வீரர்களின் கொண் டாட்டக் கூட்டத்திற்கு எதிர்புறத்திலே - நில விலங்கு பூட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக் கிறான் முத்தன். அவனது உடலிலேயிருந்து வியர்வை மழை பொழிந்த வண்ணமிருக்கிறது குனிந்த நிலையிலிருந்து அவனால் நிமிர முடியாத படி கையும், காலும் சங்கிலியால் பிணைக்கப் பட் டிருக்கிறது. கழுத்திலே தாங்கமுடியாத வலி. அந்த வலியைப் போக்கும் வலிமை வாய்ந்த கரம் இங்கில்லை; பழுதூரில் திருசங்குவின் வீட்டில் இருக்கிறது. இடுப்பை வெட்டி எறிந்து விட் டாலும் பரவாயில்லையே என்று எண்ணுகிற அளவுக்கு சொல்லொணாத வேதனை. ஒவ்வொரு எலும்பிலும் ஒரு ஈட்டி பாய்ச்சப்பட்டு, நரம்பு களிலே ஊசி யேற்றப்பட்டு, தசைகளை யெல் லாம் உளியால் செதுக்கினால் எப்படியிருக்குமோ- அப்படியிருந்தது அவனுக்குக் கஷ்டம்! .. முத்தாயி" என்று புலம்புவது மட்டுமே அவனுக்கு ஆறுதலாகயிருந்தது. 105