பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 ரத்தக் கண்ணீர் முத்தாயி: ஒளிக்குப் பக்கத்திலே யிருந்தாலும் நிழல் இருளாகத்தானிருக்கும். உற்சாக நிகழ்ச்சிகள் எவ் வளவு இருந்தாலும், என் உடைந்த உள்ளத்திற்கு மருந்தேது தந்தையே! திருசங்கு: மகளே ! நான் செய்த தவறுகளை மறந்து விடு. பாழும் பொருளாசையால் பைத்யக்காரன் போல நடந்துவிட்டேன். உங்கள் தூ ய்மையான அன்பைத் துண்டாட நினைத்த இந்த துரோகியை மன்னித்துவிடம்மா! முத்தாயி: அப்பா! திருசங்கு: (என்று கதறி தந்தையின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.] அழாதே - உன்னையும், முத்தனையும் சேர்த்து வைக்க தீர்மானித்துவிட்டேன். உடனே புறப்படு! முத்தாயி: எங்கேயப்பா? திருசங்கு: கேளம்மா! நீ முத்தனைக் காதலிக்கிற விஷ யம் பாளையக்காரருக்குத் தெரிந்துவிட்டது. சுகதேவ னுக்கும் உனக்கும் திருமணம் நடப்பதை விரும்பாத பாளையக்காரர் உன்னை உடனே முத்தனுக்கு மண முடிக்கும்படி கட்டளையிட்டுவிட்டார்! முத்தாயி: ஆகா! அவர்கள் சுயநலம் என் சோகத்தைத் துடைத்துவிட்டது! திருசங்கு: முத்தனை விடுதலை செய்யுமாறு பாளையக் காரர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களும் அவனை விட்டுவிடுவார்கள். முத்தாயி: வந்துவிடுவாரா அவர்?...