பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 இரத்தக் கண்ணீர் தேய்த்துக்கொண்டிருந்த வாலிபன். தேய்த்த களைப்பில் தெருத் திண்ணையிலேயே அமர்ந்து பெருமூச்சுவிடுகிறான். ஓலை நிரப்பிய பையை முதுகில் போட்டுக்கொண்டு, மணி, யோசை எழுப்புகின்ற வேல் கம்பை கையில் பிடித்தபடி அந்த முரட்டு மனிதன் குதிரையில் ஏறி உட்காருகிறான். குதிரை பறக்கத் துவங்குகிறது. குதிரை யோடும் பக்கம் கண்களை செலுத்தியபடி யிருக்கிறான் முத்தன். மக்கள் நாலைந்து பேர் அஞ்சல் மனையில் நுழைகிறார்கள். அவர்கள் முத்தனைப் பார்த்து. ஊர் "முத்தா! அஞ்சல் மனையார் இருக்கிறாரா?" என வினவுகிறார்கள். அதோ உட்கார்ந்திருக்கிறாரே! தெரியவில்லை 99 என்று உள்ளே கையைக் காட்டுகிறான் முத்தன். ஊர் மக்களில் ஒரு பெரியவர், என்ன வேதாளம்! எனக்கு ஏதாவது அஞ்சல் உண்டா?" 64 'அஞ்சல் ஒன்றுமில்லை-ஐந்து வராகன் கொண்ட ஒரு சிறு முடிச்சு வந்திருக்கிறது." 46 அப்படியா! மிகச் சந்தோஷம்” பெரியவர் அந்த முடிச்சைப் பெற்றுக்கொள்கிறார். 8. அதிர்ஷ்டம்தான்! உம் வேதாளத்துக்கு ஒன்றும் கிடையாதா?' 44 உமக்கில்லாமலா ! இந்தாரும் !" பெரியவர் முடிச்சை அவீழ்த்து ஒரு பொன் நாண யத்தை எடுத்து வேதாளத்தின் கையில் கொடுக்கிறார். வேதாளத்தின் அகலமான வாய் ஒரு புன்னகையைக் கொட்டுகிறது. மற்றவர்கட்கு வந்திருக்கும் ஓலைகளைக் கொடுத்து எல்லோரையும் அனுப்பிவிடுகிறான். பிறகு.