பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி bl 1.17 காகத் தவங்கிடக்கிறானோ, அந்த அழகான உட டல், நான வளர்த்தது நான் வளர்த்தது! எனக்கு துரோகம் பண்ணாதே. முத்தாயி: சே ! உங்கள் மகளிடமா இப்படிப் பேசு கிறீர்கள்? திருசங்கு: மகள்! மகளாயிருந்தால் தகப்பனுடைய மனதை இப்படி எரிய விடுவாளா ? நீ மகளாயிருந் தால் ஒரு வயதான தகப்பன். வாஞ்சையுள்ள தகப்பன்- வறுமையிலே பல நாள் கஷ்டப்பட்டவன்- இப்போது வாழ்ந்து பார்க்கலாமென்று நினைக்கி றேனே - அதற்குத் துணை புரிவோம் என்று எண்ண மாட்டாயா? நான் வாழ்வதற்காக --உன்னை யென்ன; தீயிலா குதிக்கச் சொல்லுகிறேன்? பெரிய தியாகமா பண்ணச் சொல்லுகிறேன்? தேடக் கிடைக்காத இடம் - அந்த இடத்து தெய்வமாக வைத்துப் போற்று கிறேன் என்கிறான். நீ தேம்புகிறாய் - விம்முகிறாய்- புலம்புகிறாய் - புத்தியற்றவளே ! முத்தாயி: அப்பா ஒரே ஒரு உதவி செய்யுங்கள்- என்னைக் கொன்று விடுங்கள் ! திருசங்கு: கொல்வதற்காக இவ்வளவு செலவழித்து வளர்க்க வேண்டியதில்லை உன்னை! முத்தாயி: வளர்த்ததற்காக, உயிரோடு வைத்துக் கொல்லுகிறேன் என்கிறீர்களா? அப்பா! என்னை சித்ரவதை செய்யாதீர்கள். உங்கள் மகள் கேட்கும் கடைசி வேண்டு கோள் வெளியிடும் இறுதியான ஆசை - என் வாழ்வை நெருப்பாக்கி விடாதீர்கள் அப்பா! 8 -