பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி பிறகு மெதுவாக அங்கிருந்து நழுவி நடக்க ஆரம்பிக்கிறான். அந்த மங்கலான வெளிச்சத் திலும் அவனால் வேகமாக நடந்துசெல்ல முடி கிறது. அவன் போய்க்கொண்டே யிருக்கிறான். கடைசியாக அவனது கால்கள் - கண்ணாடி மாளி கைக்குப் பின்புறமுள்ள ஒரு தோட்டத்தின் பக் கத்தில் போய் நிற்கின்றன. கூனலாயிருந்த அவனது முதுகு நிமிர்கிறது. கண்ணாடி மாளீ கையை நெருங்குகிறான் கிழவன். மாளிகையின் பலகணிப் பக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிற பெரிய கொடிகளைப் பிடித்துக்கொண்டு மேல் நோக்கி ஏறுகிறான். அப்படி ஏறும் முயற்சி யிலே வெற்றியும் பெற்றுவிடுகிறான். மாளிகை யின் உட்புறத்திலே அந்தக் கிழவன் இறங்கி விடுகிறான். மெதுவாக நடக்கிறான் பூனைபோல!- ஒரே அமைதி-முத்தாயி இருக்கும் அறையின் பக்கம் வந்துவிடுகிறான். இந்த சமயத்தில் திரு சங்குவும் - சுகதேவனும் மாளிகை மேற்புறத் திலே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரி யுமா? நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கள். by 128 சுகதேவ்: ஆகா! இந்த அழகான நிலாவெளிச்சத்திலே இன்றையதினம் உம்முடன் நின்றுகொண்டிருக் கிறேன். நாளையதினம் நானும்- முத்தாயியும் இந்தத் தேன் நிலவை அனுபவிப்போம். திருசங்கு: நீங்களும் -- நானும் அதிர்ஷ்டசாலிகள்தான் தம்பி ! நான் உங்களை மருமகனாகப் பெற்றேன்- நீங் கள் என் மகளை மனைவியாகப் பெற்றீர்கள். சுகதேவ்: அதிலென்ன சந்தேகம் இந்த நிலவுகூட அதைத்தான் சொல்லுகிறது.