________________
132 இரத்தக் கண்ணீர் ரண்டு மதுக் யரைக் கதவைத் தாளிட்டான். கிண்ணங்களை எடுத்து அருகிலே வைத்துக் 'முத்தாயி. முத்தாயி கொண்டான். 81 என்று அன்பு ததும்ப அழைத்தான் அவள் இப்பக்கம் திரும்பவே யில்லை. அவளது வாய் கட்டப்பட் டிருப்பதை உணர்ந்தான். ஆகா உனது பொன்மொழி சிந்தும் இதழ்களை யார் மூடியது? இந்தக் குதிரைக் காரப் பயல்கள் - முட்டாள்கள்!" என்றபடி வாய்க் கட்டை அவிழ்த்துவிட் டான். அவ்வளவுதான் உடனே கரகரத்த குரலில், சுகதேவ் அழுவதற்குத் தொடங்கினான். வெற்றிவேலன் திடுக்கிட்டுப் போய், சுகதேவை கூர்ந்து கவனித்தான். ஆம்-முத்தாயி அல்ல! சுகதேவ்தான்! வெற்றிவேலனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை, சுகதேவை அறைந்துவிடுகிறான். பலமாக சுகதேவ்: அய்யா பிரபுவே ! என்னை அடிக்காதீர்கள். வெற்றிவேலன் : நீ எப்படி இங்கு வந்தாய்? சுகதேவ்: நானும் முத்தாயியும். அவள் ஆணாகவும், நான் பெண்ணாகவும் வேஷம் போட்டுக்கொண்டு. ஆற்றங்கரை யோரத்திலே-ஆனந்தமாக விளையாடு வதற்குச் சென்றோம், அப்போது ஏற்பட்டது பிரபு இந்த ஆபத்து. வெற்றிவேலன் : முட்டாள்? ஓடு--இதைவிட்டு! வெளியில் சொல்லாமல் சுகதேவ்: கண்ணே முத்தாயி ! நல்ல வேளை. நீ தப்பி விட்டாய்- நீ எங்கு போனாயோ- நான் எங்கு கண்டு தேடுவேன்? வெற்றிவேலன்: இங்கு நிற்காதே. ஓடு! உன்னை சுகதேவன் பயந்து நடுங்கி அதைவிட்டு ஓடி விடுகிறான்,