________________
138 இரத்தக் கண்ணீர் சு முன்னே! பொன்னகருக்குச் செல்ல அவன் அமைத்த நூலேணி சுக்கல் சுக்கலாக அறுந்து போய் விட்டது. மகளை மாளிகை ராணியாக்கி மகிழலாம் என காத்திருந்தன். இப்போது மாளிகையின் வாயிற்படி ஏறிடக்கூட அவனுக்கு உரிமையில்லை. அவனைச் சுற்றிலும் பயங்கர மேகங்கள் இருளைப் பொழிகின்றன. அவன் இருதயம் படபடவென அடித்துக் கொள்கிறது. மங்கிப் போய் விட்ட அவனது கண்கள் வீட் டின் உத்திரத்தை கூர்ந்து பார்க்கின்றன. னது கையிலே ஒரு அழுத்தமான கயிறு. அதை உத்திரத்தில் கட்டுகிறான். கதவைத் தாளிடு கிறான். 64 அவ ஆகாயமளாவ ஆசைப்பட்டேன். என் ஆசையெல்லாம், இந்த அழுத்தமான கயிற்று வளையத்துக் குள்ளேயே அடங்கி விட்டது என்று கூறிக் கொள்கிறான். அவ்வளவு தான்; சாவின் மீது பாய்ந்து விட்டான். இனி மேல் அவனை யாரும் குற்றவாளி என்று கூறி கூண்டில் நிறுத்த முடியாது. பலதேவரின் பகை யும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.