________________
73 காட்சி 43] மு. கருணாநிதி 141 [அடைக்கலபுரி பட்டினம் ஒரு தனவணிகர் வீட்டுத் தாழ்வாரம். அங்கே, தன வணிகரும், கையில் குழந்தையுடன் அவரது இல்லக் கிழத்தியும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே-ஒரு கூனன் என். சொல்ல தக்க அளவுக்கு முதுகு வளைந்தவனும்-நொண்டி யுமான ஒரு பெரிய மீசைக்கார வாலிபன் நிற் கிறான். அவன் முத்தன் என்று சொல்லத் தேவையில்லை. அவனுக் கருகே முத்தாயி நிற்கிறாள். தனவணிகன்: உங்களால் என்ன வேலை செய்ய முடியும். முத்தாயி: இட்ட வேலையைத் தட்டாமல் செய்வோம். தனவணிகன்: நீங்கள் இருவருமே, வீட்டுவேலை செய்வ தாயிருந்தால் பரவாயில்லை... முத்தாயி: ஆமாம் - அவர் நொண்டி வெளி வேலைகளை எதுவும் கவனிக்க முடியாது. தனவணிகர் மனைவி: என் குழந்தையை நீ பத்திரமாக வளர்ப்பாயா? முத்தாயி: வளர்க்கிறேனம்மா !-இதோ முழந்தை கூட என்னிடம் தாவுகிறது பாருங்கள். வாடா கண்ணா [குழந்தையை தூக்கிக் கொள்கிறாள்] தனவணிகர் மனைவி: உன் பெயர் என்ன சொன்னாய்; பொன்னிதானே-? முத்தாயி: ஆமாம் - அவர் பெயர்......