பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-75 145 காட்சி 45] மு. கருணாநிதி [அடைக்கலபுரி தேவாலயம் மணியோசை கேட்டபடி யிருக்கிறது. இளந் துறவி சுகதேவ் நிஷ்டையிலிருக்கின்றான் போலும்! முத்தாயி ஜபம் மும்முரமாக நடை பெறுகிறது. அப்போது, ஒரு நரைத்ததாடி சாமியார் அங்குவருகிறார். இவர் யார் இந்தப் போட்டி சாமியார்? சுகதேவுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கட்டும்; நமக்குத் தெரியட்டும் வேதாளம் தான் வெண்தாடி சாமியாக வந்திருக் கிறான் என்பது! - வேதாளம், சுகதேவிடம் வருகிறான். வேதாளம்: இளந்துறவியே !... முதலில் என் வாழ்த் துக்கள். சகதேவ்: வெண்தாடிப் பெரியவரே ! உலகம் பொய்!- உமக்கு என்னவேண்டும். வேதாளம்: பொய்யான இந்த உலகத்தின் மெய்யான இளைஞரே! உமக்கு எவ்வூர்? உம்மைப் பார்த்தால்- ஏதோ உள்ளங்கவர்ந்த ஒரு பொருளை பறிகொடுத் தவர் போலத் தோன்றுகிறதே!- சுகதேவ்: அதிசயமனிதர் நீர்! அகத்தில் உள்ளதை எப்படிக் கண்டீர்? எவ்வாறு விண்டீர்? - திரிகால முணரும் தேவாமிர்தமா உண்டீர்? வேதாளம்: தம்பி - காதலில் தோற்றவன் நீ என்பது என் ஞானக்கண்ணில் தெரிகிறது- மெய்தானா? சுகதேவ்: ஆமாம் - எப்படித்தெரியும் உமக்கு? வேதாளம்: உத்தமர்களுக்கு உலகின் ஒவ்வொரு கோடி யும் தெரியும். நீ ஓர் அரண்மனைவாசி ! ஆரணங்கின்