பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 இரத்தக் கண்ணீர் மயக்கத்தால் ஆசிரமத்து வாசியாகி விட்டாய் இல்லையா? சுகதேவ்: ஆமாம் ஸ்வாமி - ஆரணங்குகளின் மயக்கம் விட்டவர்களே ஆஸ்ரம வாசிகளாக முடியுமென்பார் கள். நானோ - அந்த ஆண்டியாகியிருக்கிறேன். வேதாள மயக்கத்தாலே கட்டுண்டு அரண்மனையை விட்டு - அங்கும் ளம்: அதிசயமல்ல ஆரண்யம் வந்தான் விசுவாமித்திரன் விட்டபாடில்லை அழகிகளின் தொல்லை! - அவன் தவத்தின் மேன்மைக்கோர் எல்லை மேனகா பெற்ற கிள்ளை! சுகதேவ்: ஆகா! பழுத்த அனுபவமும், கொழுத்த பக்தி யும் கொண்ட தவசிரேஷ்டரே! தங்களால் தான் நான் தன்யனாக வேண்டும். வரம் தாருங்கள். வேதாளம்: புரிகிறது அந்த நாலெழுத்து நங்கையை நீ அடைய வேண்டும். சுகதேவ்: மு... த்... தா... யி... ஆகா! சரியாகச் சொன் னீர் சற்குருவே! நாலெ முத்துத்தான் அந்த நாரீ மணியின் பெயர். வேதாளம்: அவளை உனக்கு நான் திருமணம் முடித்து வைக்கிறேன். இளம் வயதில் இந்தக் கோலம் வேண்டாம் உனக்கு ? செய்ய வேண்டிய அக்கிரம மெல்லாம் செய்து விட்டு-தள்ளாத காலத்திலே 'சிவ சிவா' என்று கூவுவதே மனிதர்க்குத் தகுதியான செய்கை!