பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 இரத்தக் கண்ணீர் அப்போது, ஒரு தாடிக்கார கிழவர் அங்கே நுழைகிறார். எல்லோரது கவனமும் கிழவரின் மீது பாய்கிறது. கிழவர்--பலதேவரைப் பார்த்து வணங்குகிறார். பலதேவர்: வாரும் பூபதி ! வாரும்! பல ஆண்டுகளாகி விட்டனவே உம்மைப் பார்த்து! தாடியெல்லாம் வெளுப்பேறியும் விட்டதே! கிழவர் 'ஆமாம்' என்பதுபோல தலையை யசைத்து அசட்டுப் புன்னகை காட்டுகிறார். அதற்குள் சாமியார். கிழவரைப் பார்த்தபடி- பலதேவரிடம், சாமியார்: தளிர் சருகாகத்தானே மாறும்? தாடி வெளுப்பாவதிலே என்ன ஆச்சரியம். பூபதி : ஒன்று சொன்னீர், அதுவும் ஈன்று சொன்னீர்! உண்மை - உள்ளங்கை நெல்லிக் கனி ! பலதேவர்: பூபதியாரே ! வெளிநாட்டுப் பயணங்கள் எப்படியிருந்தன? உமது மருத்துவத் தொழில் முன் னிலும் பன்மடங்கு சிறப்படைந்திருக்குமென்று எண்ணுகிறேன். அதற்கு உமது சுற்றுப் பயணம் பயன்பட்டதல்லவா? பூபதி: நிச்சயமாகப் பயன்பட்டது! இருபதாண்டுகள் இடைவிடாத அலைச்சல் வீண்போகவில்லை. மாயத் தாலும் - மந்திரத்தாலும் தீர்க்கமுடியாத பலவற்றை மருத்துவத்தால் தீர்க்கலாம் என்ற உண்மையை கிழவர் வார்த்தையை முடிப்பதற்குள் சாமி யார் குறுக்கிட்டு ...... சாமியார்: திருச்சிற்றம்பலம் ! தெய்வத்தால் ஆகா தொன்றில்லை!... அன்புக்குரியவர்களே... ஆரம்பிக்