பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 காட்சி 47] இரத்தக் கண்ணீர் [கடற்கரை கடற்கரையின் வெண்மணலில் குழந்தை யுடன் முத்தாயி விளையாடுகிறாள். சங்குகளைப் பொறுக்கியும் - அலைக்கரங்கள் இறைக்கும் நுரை களை அரித்து மகிழ்ந்தும் - குழந்தையும் தானும் ஒன்றாகி விடுகிறாள். வானத்திலே கருமேகங் கள் சூழுகின்றன. கடற்கரையின் ஒரு பகுதி யிலே வேதாளச் சாமியாரும், சுகதேவும் வந்து கொண்டிருக்கிறார்கள். வானம் குமுறுகிறது. காற்று ஒரு மாதிரி வீசுகிறது. மின்னல்கள் கிளம்புகின்றன. முத்தாயி குழந்தையைத் தூக்கி வண்டியில் வைத்து வீடு நோக்கிப் புறப் படுகிறாள். வீடென்ன : அருகாமையிலா இருக் கிறது. மழையும் வந்துவிட்டது. காற்றும் முற்றி விட்டது. முத்தாயி குழந்தையுடன் ஒதுங்கு வதற்குக் கூட வீடுகள் எதுவுமில்லை. அவசர அவசரமாக ரதவண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறாள். மழையின் காரணமாக வேதாளமும், சுகதேவும் வேகமாக நடந்து வருகிறார்கள். காற்று இன்னும் பலம் பெறுகிறது. மழைத் துளிகளோ சவுக்கின் நுனிபோல உடம்பில் தாக்குகின்றன. மலைகள் உருளுவது போல இடி குமுறுகிறது. முத்தாயி திக்கு தெரியாத வளாகிறாள், குழந்தையோ வீறிட்டலறுகிறது. குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு ஓடுகிறாள். இந்த நிலையில் தனவணி கர் வீட்டில் குழந்தையின்னும் வரவில்லையே என்ற ஏக்கம் பிறக்கிறது. குதிரை பூட்டிய பல்லக்கு வண்டி தயாராகிறது குழந்தையைத் தேட!