பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 இரத்தக் கண்ணீர் முத்தாயி: சுமதி -- அன்று, உன்னைப் புரிந்துகொள்ளா மல் கோபமாகப் பேசிவிட்டேன். மன்னித்துவிடு! சுமதி: அதையெல்லாம் மறந்துவிடுவோம். முத்தாயி: கல்யாணமானதும் உன்னுடைய குறும்புப் பேச்செல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்துவிட்டதே!- சுமதி எங்கும் ஒளியவில்லை... அவருக்கு உடல், நலம் பெறட்டும் - பிறகு கேளேன் என் பேச்சுக்களை ! முத்தாயி - என் பேச்சை நீ, 'குறும்பு என்கிறாய். அவர் என்ன தெரியுமா சொல்கிறார்; 'கரும்பு என்கிறார். முத்தாயி: சரி! உன்னுடையவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதே- கொஞ்சம் என்னுடையவரையும் கவனி. சுமதி: இதோ - இப்போதே அந்த வணிகர் வீட்டுக்குப் போகிறேன். முத்தாயி: அங்கே அவருக்குப் பெயர் - பொன்னன்!- அதை மறந்துவிடாதே!- சுமதி : சரி உன் கணவரையும் அழைத்துக்கொண்டு, அப்படியே மருத்துவ மனைக்கும் போய்விட்டு வந்து விடுகிறேன். நீ சற்று தூங்கு! மிகவும் களைத்துப் போயிருக்கிறாய். சுமதி போய்விடுகிறாள். முத்தாயி தூங்க ஆரம்பிக்கிறாள்.