பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 மு. கருணா நி தி 15 கலாம் நமது அருள் நெறித் திரு அற உபதேசத்தை எண்ணுகிறேன்..... என பலதேவர்: காத்திருக்கின்றோம் ஸ்வாமி... சாமியார்: மகான்களைப் பற்றி நேற்று சொன்னேன் கடலை அல்லவா? மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை. தோன்றவும் முடியாது! ஆனால் அப்படித் தோன்றும் மகான்களால் ஆகாதது எதுவு மேயில்லை ! வற்றவைப்பர் ககனத்தில் மிதந்திடுவர் ளுடன் பேசுவர் - கரும்பிலே கசப்பு காட்டுவர்-காகத் தையும் கந்தர்வ கானம் எழுப்பச் செய்வர்--- அத்த கைய அருட் சக்தி பெற்றவர்கள் அவர்கள். கடவு வீரர்கட்கும், விவேகிகட்கும் மண்ணிலேதான் புகழ் ! ஆனால் மகான்கட்கோ விண்ணிலும் புகழ். ஆகவேதான் சொல்லுகிறேன், வாளையும் வேலையும் தொடாதே! வைகுந்தவாசனைத் தொழு ! கையினிலே கேடயம் ஏந்தாதே! கைலாச நாதனின் திருநீறை ஏந்து ! நீ யார் - நான் யார்? தாய், தந்தை, அண்ணன், தம்பி - எல்லாம் வீண்-முடிவில் ஒரு பிடி. மண் ! மாயப் பிரபஞ்சம் - காயமெடுத்தோர்க்கோ ஆண்டவனிடம் செல்லவேண்டும் நெஞ்சம்! சாமியாரின் நீண்ட பிரசங்கம் முடிவதற் குள்ளாகவே, அஞ்சல் மனை வேதாளம் உள்ளே நுழைகிறான். சாமியார் அவனைக் கண்டதும் பிரசங்கத்தை முடித்துவிடுகிறார். வேதாளம்: ப்ரபூ! நமஸ்காரம்! ஸ்வாமி! நமஸ்தே! என்று முறையே பலதேவரையும், சாமியாரையும் வணங்குகிறான்.