பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

164 காட்சி 57] இரத்தக் கண்ணீர் (வேதாளம் இருப்பிடம் வெற்றிவேலனும்-முத்தாயியும்!-முத்தாயி பொங்கிவரும் எரிமலையின் முன்னே தவித்துக் கொண்டிருக்கிறாள். வெற்றிவேலன்: என்ன விழிக்கிறாய் ? நீ எங்கு சென் றாலும் நான் விடமாட்டேன். வானம்பாடியாக நீ பறந்தால் உன்னை வட்டமிடும் பருந்தாக மாறுவேன். புள்ளிமானாக மாறித் துள்ளினால் புலியாகச் சீறிடு வேன். நீ கடைசியில் பிணமானால் கூட உன் சரீரத் தைத் தொட்டெரிக்கும் சந்தனக் கட்டையாக மாறு வேன் நான். இன்பமே ! இணங்கிவிடு. வசந்தத்திலே புஷ் பிக்கும் வாசப்புது மலரே ! வந்துவிடு என்னிடம். வண்ணத் தாமரையே! வர்ணஜாலப் பூங்கொத்தே! என் வலிமை மிக்க தோள்களிலே உன்னை எடுத்துக் கொள்வேன் - பாய்ந்துவிடு பைங்கிளியே ! முத்தாயி: பாவி ! என்னைவிட்டு விடு ! வெற்றிவேலன்: கையிலே கிடைத்த கனி வாரி என்மேல் கண்ணியில் அகப்பட்ட பறவை - கபோதிகள் கூட விடமாட்டார். கள். முத்தாயி உன்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பது மலரைக் கசக்கி முகர்ந்தால் மணம் இருக்க ருக்காது என்ற காரணத்திற்காகத் தான் எச்சரிக்கிறேன்; பொறுமையை சோதிக்காதே! முத்தாயி: சீ!- (முத்தாயி வெற்றிவேலனை அறைந்து விடுகிறாள்.)