பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

166 ரத்தக் கண்ணீர் வேதாளமும் உள்ளே வந்து விடுகிறான். அவன் முத்தாயியை ஓடிவிடாமல் பாதுகாக்கிறான். தளபதியின் தாக்குதல் முத்தனை சுருண்டு விழச் செய்கிறது. காதலனின் நிலைமையை முத்தாயி கண்டு அலறுகிறாள். முத்தன் கன்னமெல்லாம் வீங்கி விட்டது. வாயிலிருந்து ரத்தம் கசிகிறது. அவனால் தளபதியை எதிர்க்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறான். தளபதி, கம்பீரமாக நிற் கிறான் முத்தனை வீழ்த்திவிட்ட பெருமையில்! கீழேவிழுந்த முத்தன் தலை நிமிருகிறான். அவனது கண்களில் நெருப்பு கிளம்புகிறது. புயல் போல மூச்சு விடுகிறான். அவ்வளவுதான்; எழுந்து விட்டான் முத்தன். தளபதியால் தடுக்க முடி யாத அளவுக்கு...... பட படவென அவன்மீது, எதிர்த்தாக்குதலைப் பொழிகிறான். வேதாளம் அஞ்சி நடுங்குகிறான். முத்தனைக் கொல்ல வேதாளம் முயலும்போது, முத்தாயி தடுத்து விடுகிறாள். முத்தன் தளபதியின் நெஞ்சின்மீது அமர்ந்துகொண்டு பலமாகத் தாக்குகிறான். பிறகு வெற்றிவேலன் எழவேயில்லை. அவன் கோரக் கண்கள் மூடிவிட்டன. முத்தனின் ஆத்திரம் வேதாளத்தின்மீது பாய்கிறது. வேதாளம் ஓடு கிறான். ஓடிவிடுகிறான். முத்தன் களைத்துப் போய் நிற்கிறான். முத்தாயி அவனைத் தழுவி நிற்கிறாள். வெளியிலே ஓடும் வேதாளச் சாமியாரை - வீரர்களை அழைத்துக் கொண்டுவரும் சுகதேவன் பார்க்கிறான். உடனே வீரர்களிடம் "இவனை விடாதீர்கள்" என்று கத்துகிறான். ஒரு வீரனின் ஈட்டி பாய்கிறது. அதை முதுகில் ஏந்திக்