பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86. மு. கருணாநிதி கொண்டே வேதாளம் ஓடிப்போய் - ஒரு மலைச் சரிவில் விழுந்து கண்ணை மூடுகிறான். அவனது மேலங்கி தாறுமாறாகக் கிழிந்து கிடக்கிறது. அந்தக் கிழிசலின் இடையே பூணூல் மின் கிறது. னு சுகதேவும் வீரர்களும்-ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைந்து விடுகிறார்கள். முத்தன் - முத்தாயி திகைக்கிறார்கள். வீரர்கள், முத்தனை வளைத்துக் கொள்ளுகிறார்கள். வீரர் தலைவன், வெற்றி வேலன் நிலைமையைப் பார்த்து. 'ஆ/ நமது தளபதி" என்று கூவிய வண்ணம் அவனிடம் ஓடுகிறான். வெற்றிவேலன் கண்கள் மெதுவாகத் திறக்கின்றன. உதடு அசைகிறது. அந்த அசைவு கூட நல்ல அசைவாக இருக்கக் கூடாதா! "" முத்தன் படையிலிருந்து ஓடிப் போய்விட் டான் இவன் எதிரிநாட்டு ஒற்றன். அவனைப் பிடிக்க வந்த இடத்தில்... இப்படி யாகிவிட்டது ..முத்த....' வெற்றிவேலனின் இமைந்து கொண்டிருந்த கடைசி மூச்சும் நின்று விட்டது. 167 வீரர் தலைவன்: யார் இந்த முத்தன்? இவன்தானே - இவனைக் கொண்டு செல்லுவோம் உடனே வேங்கை புரத்திற்கு!- உம்- இழுத்து வாருங்கள். முத்தனை வீரர்கள் விலங்கிட்டு இழுத்துச் செல்லுகிறார்கள். முத்தாயி 'அத்தான் என ஒருமுறை கதறுகிறாள். மயக்கமுற்றுக் கீழே விழுகிறாள்.