பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ரத்தக் கண்ணீர் பலதேவர்: எனக்கு ஏதாவது ஓலைகள் உண்டா, வேதாளம்! வேதாளம்: உண்டு, அவைகளை அரண்மனையிலேயே கொடுத்துவிட்டேன். சாமிகளுக்கு காணிக்கை வந்தி ருக்கிறது நிறைய ! அதை எடுத்துவந்தேன். சர்மியார்: காணிக்கை! வாழ்க பக்தர்கள் ! எவ்வளவு வேதாளம்? வேதாளம்: நூறு பொன் நாணயங்கள் வரையில்! சாமியார்: சந்தோஷம், அதோ இருக்கிறது உண்டியல்! இதற்குள் - பலதேவரும் ஊர் மக்களும், பலதேவரின் மகன் சுகதேவும், அரண்மனைக் காவலன் திருசங்கும் மடாலயத்தை விட்டுப் புறப்படுகிறார்கள். வேதாளம், நூறு பொன் நாணயங்களையும், சாமியார் காட்டிய உண்டிய லிலே போடுகிறான். அதை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவக் கிழவனார் பூபதி - ஏளனமான சிரிப்புடன் பூபதி: ஸ்வாமிகள் பொன்னைத் தொடுவது கிடை யாதோ! சாமியார்: விஷம்! பூபதி: அந்த விஷத்திலே வளர்வதுதானே இந்த விருக்ஷம்! என்று சிரித்தபடி சாமியார் பக்கம் சுட்டு விரலை நீட்டுகிறார். வேதாளம் வெளியேறிவிடு துறான். சாமியார்: பூபதி ! உயிரை வாங்காதீர்... போய்வாரும்.