பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 177 அந்தப் பரம ரகசியம் மட்டும் பாதாளத்தில் புதைந்து கிடந்தது. சாமியாரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் - சொல்ல வில்லை - ஆனால் இப் போது புரிகிறது. அந்தக் குழந்தை பிறந்த இடம், இந்த அறைதான் என்பது! - ஆம் - இன்று தூக்கு மேடையிலே நிற்கும் முத்தனுக்கு, தொட்டில் கட்டி யிருக்கவேண்டிய இடம் இதுதான் ! ஆனால் ஒன்று பிரபுவே! இந்தச் சாமியார் அவ்வளவு அக்கரை எடுத்துக்கொண்டாரே - அது ஏன் என்று ன்னும் எனக்கு விளங்கவில்லை- (அப்போது பூங்காவனம் உரத்த குரலில் சப்தம் போடுகிறாள்) பூங்காவனம்: நான் சொல்லுகிறேன் ! முத்தனின் தாய் நான்தான் ! பலதேவர்: ஆ! பூங்காவனம்: அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் இதோ (சாமியாரைக் காட்டி) இந்தக் காதகன் தான் என்னை ஏமாற்றி விட்டான். நீங்களும் அண்ணியும் வடக்கே சென்றிருக்கும் போது இவன் வலையில் நான் விழுந்துவிட்டேன். பக்திபோதனை செய்வதாக இந்தப் பாலசந்யாசி அடிக்கடி வந்தான்- ஒரு நாள். இரண்டு நாள் உலகத்தைப் பற்றிப் பேசினான் பிறகு, உலகைப் படைத்தவனின் உத்தம குணங்களை விளக்கினான். கடவுள் அவதாரங்களின் காதல் லீலைகள் பற்றி வர்ணித்தான். மாயக் கண்ணன் மன்மதன் ரதிதேவி - மகேசன் பார்வதி- வள்ளி மணவாளன் - பிர்மா, திலோத்தமை - மேனக விசுவாமித்திரன் இப்படி யெல்லாம் புராணக் கதைகள் சொன்னான். போதை நிறைந்த அந்தக் wed 91