பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநி 93 181 முத்தன்: மதுவூரும் உன் இதழ்களை முத்தமிட்டேன். அது பிடிக்கவில்லை உலகிற்கு நீதிக்கு - நியாயத் - திற்கு. ஆகையால் மரணத்தை முத்தமிடப் போகி றேன். முத்தாயி ! கடைசியாக ஒன்று கேட்கிறேன். முத்தாயி! கடைசியாக ஒன்று கேட்கிறேன். நாம் சேர்ந்து பாடுவோமே அந்த காதல் பாட்டு அதை இனிமேல் எங்கு கேட்கப் போகிறேன், எங்கே- அதைப் பாடு ! பாடு! நீ பாடாவிட்டால் உன் காத லன் நிம்மதியாக சாகமாட்டான். பாடு - கண்ணே-- பாடு! முத்தாயி அழுதுகொண்டே அந்த காதற் கீதத்தை பாடுகிறாள், அதனின் இறுதி வரிகளில் முத்தனும் சேர்ந்துகொள்ளுகிறான், அப்போது காவலர்கள் சிறைக்கதவைத் திறக்கிறார்கள், முத்தனின் கடைசி யாத்திரை ஆரம்பமாகிறது.