பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 183 மு. கருணாநிதி காட்சி 61] அவள் தோழி சுமதி- விதவை முத்தாயி (சுமதியின் வீடு இருவரும் இருக்கிறார்கள். பாளையக்காரர் குடும் பம் முழுவதும் அவள் எதிரே இருக்கிறது, சாமி யார் உட்பட பலதேவர்: முத்தாயி! ஏன் எங்களோடு பேசமாட் டேன் என்கிறாய்... முத்தாயி: என் பெருமூச்சுகளுக்குப் பேசும் சக்தியில்லை யென்று கருதுகிறீர்களா? பூங்காவனம் : ண்ணே முத்தாயி - சொல்வதைக் கேள். எங்களோடு வந்துவிடு! என் மகனைப் பார்ப்பது போல உன்னையாவது பார்த்துக் கொண்டிருக் கிறேன். முத்தாயி: மகன் ! இன்னொரு முறை சொல்லாதீர்கள். உங்கள் மாளிகை கௌரவம் மண்ணாகிவிடும்! வெட்க மில்லை உங்களுக்கு; முத்தனை உங்கள் மகன் என்று சொல்லிக்கொள்ள.. தாயாம் தாய்! நாயைப்போல மகன் நடத்தப்பட்டபோது, வாயை முடி க்கொண் டிருந்த தாய்! பசியால் மகன் வாடிய சேதியை ருசி யோடு கேட்டுக் கொண்டிருந்த தாய்! மகன் என்ற பாசத்தை மறைத்துக் கொள்ளத் தூண்டியது; உங் கள மாளிகை வாசம் புத்திரன் என்று கூறிக் கொள்ளத் தடையாயிருந்தது உங்கள் போலி கௌர வம் - கண்யம் - மதிப்பு - மரியாதை - மண்ணாங்கட்டி எல்லாம்/பாளையக்காரர் பெருமைக்குப் பங்கம் வரக் கூடாதென்று தானே - பத்து மாதம் சுமந்து பெற் றெடுத்த மகனை பரதேசி போல நடத்திக் கொண் டிருந்தீர்கள்? எங்கே தாயே; அந்தத் திமிர்? திமிருக் குப் போட்ட திரை கிழிந்துவிட்ட காரணத்தால் தேடி வந்தீர்களோ மகனை ! - மாளிகை கௌரவத் 12