பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 காட்சி 4] மு. கருணாநிதி 21 [திருசங்குவின் வீடு. அரண்மனை வேலைக்காரனுக்குரிய அந்தஸ் துடன் காணப்படுகிறது. வீட்டுக்குள்ளிருந்து இனிமையான கீதம் தென்றலுடன் கலந்து வரு கிறது. அந்த கீதத்தில் பொதிந்து கிடக்கும் பொருள் தான் எவ்வளவு சுவையானது, அந்த இன்ப மழையைப் பொழிந்திடும் குரல் நிச்சய மாக ஆண் குரலாயிருக்க முடியாது. குளிர்ச்சி கொட்டும் பெண்ணின் குரல் தான். ஆம், முத் தாயி தரும் இசையின்பந்தான் அது. வீணை அதிர்வது போலும், குழல் ஒலிப்பது போலும் எழும்புகின்ற அமுதத்தொனி இளங் காற்றிலே அலையெழுப்பி பரிபூரணமான அமைதி நிறை சூழ்நிலையை உருவாக்கிய வண்ணமிருக்கிறது. பாடிக் கொண்டிருந்த முத்தாயி திடீரென பாட்டை நிறுத்துகிறாள். அப்பா!" என அழைத்தபடி கதவண்டை ஓடுகிறாள். அதற் குள் முகம் நாணித் திரும்பி விடுகிறாள். ய 66 திருசங்கு: வெட்கப்படாதேயம்மா! யாருமில்லை இள வரசர் சுகதேவ் இவர்தான். முத்தாயி: (தலை குனிந்தபடி) வணக்கம். சுகதேவ்: கைகள் குவிவதும், விரிவதும் கமல் மலர் போல் காட்சியளிக்கிறது! திருசங்கு நீ சொன்னது உண்மை தான்! அந்த வார்த்தைகளைக் கேட்டதும் முத்தா யிக்கு முகம் மாறுகிறது. படைகிறது. கோபத்தால் சிவப் சுகதேவ்: பாவம்; வெடகத்தால் கன்னங்கள் சிவந்து விட்டன. 2