பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 இரத்தக் கண்ணீர் முத்தாயி எதுவும் பேசாமல் அடுக்களைக்குள் போய்விடுகிறாள். சுகதேவ், திருசங்குவைப் பரி தாபமாக பார்க்கிறான். திருசங்கு: பார்த்த உடனேயே இப்படிப் பரிகாசம் செய்யலாமா தம்பி நீங்கள் ! சுகதேவ்: என்ன சொன்னேன். என்ன சொன்னேன் எனக்குத் தெரியாமலே ஏதாவது சொல்லி விட் டேனா ?... திருசங்கு! நான் உன்னை ஒன்று கேட்கி றேன் மறுக்க மாட்டாயே! திருசங்கு: நீங்கள் பாளையக்காரர் பலதேவரின் மகன். இளவரசர். நான் கேவலம் உங்கள் வேலைக்காரன். கேட்காமலே எடுத்துப் போகும் உரிமையிருக்கிறது உங்களுக்கு! சுகதேவ்: ஆகா! கண்கள் சுழலுகின்றன. காது கேட்க மறுக்கிறது, நா அசைய இருதயம் ஓடவில்லை ! திருசங்கு: தம்பீ! மாட்டேன் என்கிறது, சுகதேவ்: காதலென்னும் கள் மொந்தையில் ஒரு போல விழுந்து விட்டேன். திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் காரியம் கைகூடிவிட்டதென களிப்படை கிறான். திருசங்கு: தம்பி ! இன்று போய் நாளை வாருங்கள்! காரியம் வெற்றி! சுகதேவ்: வராமலிருப்பேனா? திருசங்கு வீடு ஒரு தாம ரைத் தடாகம்! அங்கு பறந்து வரும் வண்டு இந்த சுகதேவ்!... போய் வருகிறேன் திருசங்கு!