பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 5 மு. கருணாநிதி பாளையக்காரர் அரண்மனையைச் சேர்ந்த ஒரு பகுதி. முத்தன் ஒரு கம்பீரமான குதிரை யைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். குதிரை சவாரி செய்யும் உடையுடன் சுகதேவ் பெருமித மாக நடைபோட்டு, குதிரையிடம் நெருங்கு கிறான். மாளிகையின் உச்சியிலே யிருந்தபடியே பாளையக்காரரும் அவரது துணைவியும் தங்கள் மைந்தனின் குதிரையேற்றத்தைக் காணக் காத் திருக்கிறார்கள். பலதேவருக்குப் பக்கத்திலே நாற்பது வயது மதிக்கதக்க ஒரு பெண்மணியும் நிற்கிறாள். பலதேவரின் முக ஜாடையும், அவ ரைப்போன்ற உயரமும் உள்ள அந்த மங்கை நிச்சயமாக அவருக்குச் சகோதரியாகத்தான் இருக்கவேண்டும். நாற்பது வயது மதிப்பிடலா மென்றாலும் அவளது தேகம் கட்டுக் குலைந்து காணப்பட வில்லை. அவளின் முகத்திலே பூரிப் புத் தவழ வில்லை. எதைப்பற்றியோ எண்ணங் கொண்டவள் போல நின்று கொண்டிருந்தாள். குதிரையிடம் வந்துவிட்ட சுகதேவன், மாளி கையின் உச்சியை அண்ணாந்து பார்த்து, சுகதேவ்: குதிரையிலே ஏறி அங்கே பாயட்டுமா? அதைக்கேட்டதும் அந்த நாற்பதுவயது மங் கை அவனைப்பார்த்து-" வேண்டாம் வேண்டாம்! நீ முதலில் குதிரையைப் பிடி பார்க்கலாம்' எ ன் று கிண்டல் செய்கிறாள். கோபங்கொண்ட சுகதேவன் "அத்தை ! என்னை அவ்வளவு மட்ட மாகவா நினைத்து விட்டாய் ! இதோ பார்-ராஜா தேசிங்கு போல" என்று அவன் சொல்லி 15 25