பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 6 மு. கருணாநி தி அரண்மனை தாழ்வாரத்தின் பக்கமாக முத்தன் போய்க் கொண்டிருக்கிறான். பூங்கா வனம் தன் அறைக்குப் போக அந்த வழியே வரு கிறாள். முத்தன் போகிற காட்சியை இமை கொட்டாமல் நின்று பார்த்துக்கொண்டிருக் கிறாள். எங்கேயோ சிந்தனையை மேயவிட்டுக் கொண்டு போகிற முத்தனுக்கு தன்னை பூங்கா வனம் விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக் கொண் டிருப்பது தெரியவில்லை. அவனது அங்க அசைவு களை -நடையின் கம்பீரத்தை பூங்காவனம் ஏன் தான் அப்படி ரசிக்கிறாளோ புரியவில்லை. அவளையறியாமல் அவளது இதழ்கள் புன்னகை யைத் தேக்குகின்றன. அதை முந்திக்கொண்டு அவளது கண்களில் நீர் அரும்பு கட்டிவிடுகிறது. அது ஆனந்தக் கண்ணீரா! அல்லது அந்த அழகே உருவெடுத்த வாலிபன் -அரண்மனையில் படும் கஷ்டங்களை நினைத்துப் பொங்கி வரும் சோகக் கண்ணீரா! முத்தன் போய்விடுகிறான் - பூங்காவனத்தின் கண்களை விட்டு மறைந்து விடுகிறான். ஆனால் அவள் இருதயத்தை விட்டு மறைந்ததாகத் தெரியவில்லை. சூடு நிறைந்த ஒரு பெருமூச்சு! பூங்காவனம் தன் அறையில் நுழைந்துவிடுகிறாள். என்ன புதிர் இது ! பாளையக்காரரின் தங்கை! பழுதூர் இளைய ராணி! அவள் குதிரைக்கார முத்தனைப்பார்த்து அப்படியொரு பெருமூச்சு விடுகிறாள். உம்... எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறதோ அந்த முத்தனுக்கு! 17 29