பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 காட்சி 7 வ இரத்தக் கண்ணீர் அரண்மனையின் முன்புறம் பல்லக்கு வடிவ முள்ள, குதிரை பூட்டிய ஆடம்பரமான வண்டி யொன்று வந்து நிற்கிறது. அந்த வண்டிக்கு பாதுகாவலாக முன்புறத்திலும் பின்புறத்திலும் முறையே இரண்டு முரட்டு வீரர்கள் குதிரை களில் அமர்ந்து கையினிலே வாள் தாங்கிய வண் வந்துகொண்டிருக்கிறார்கள். ணம் வண்டியி லிருந்து ஒரு கொழுப்பான மனிதன் இறங்குகிறான். அவனது மார்பில் வெள்ளியாலான வேங்கைச் சின்னம் பதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு ஆடைக் கும் - அந்த வெள்ளிப் பதக்கத்திற்கும், உருண்டு திரண்டு உயர்ந்த அந்த சரீரத்திற்கும். யானை போல் அசையும் அந்த நடைக்கும் ஏதோ ஒரு மதிப்பு இருக்கத்தான் வேண்டும். ஆமாம். அவன்தான் வேங்கை நகர சிற்றரசனின் தளபதி வெற்றிவேலன். வெற்றிவேலன் இறங்கியதுதான் தாமதம் பாண்டு வாத்தியங்கள் முழங்கின. கையி னிலே மாலைகள் ஏந்திய நடன மாதர்கள் எதிர் கொண்டழைக்க ஓடி வந்தனர் அபினயத்தின் மூலம்! பாளையக்காரரும், சுகதேவும் பணிவுடன் தலைகுனிந்து வணங்கியவண்ணம்எதிர்நின்றனர். வெற்றிவேலன் அவர்களுடன் அரண்மனைக்குள் பிரவேசித்தான். அலங்காரங்கள் நிறைந்த ஒரு கூடத்திலே தகுதியான ஆசனத்திலே வெற்றிவேலனை உட்காரச்செய்துவிட்டு தானும் அருகிலே பணிவுடன் அமர்ந்தார் பலதேவர். வெற்றிவேலன்: யாவரும்! என்ன பலதேவரே ! நலந்தானே