பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 பலதேவர்: கிறேன். இரத்தக் கண்ணீர் என்னால் இயன்றது செய்யக் காத்துக் கிடக் வெற்றிவேலன் ; இந்த வட்டாரத்தில் ஒரு நூறு பேரா வது படையில் சேர்ந்திடச் செய்ய வேண்டும். பலதேவர்: முயற்சிக்கிறேன். வெற்றிவேலன் : ஆனால் கட்டாயமாக யாரையும் சேர்க்க வேண்டாமென காவலன் கட்டளை ! பலதேவர் : ஆமாம் - அப்படிச் சேர்ப்பது படையா காது ! நமக்கு நாமே கட்டிக்கொள்ளும் பாடையாகி விடும். வெற்றிவேலன்: உண்மை! உண்மை! உமது ஊர் மக் களுக்கு வேங்கை புரத்துப் படையில் சேர்வது என் றால் வெறுப்பாயிருக்கும் ஏனெனில் அவர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் அரசனன்றோ எம்மவர் ! பலதேவர்: அதெல்லாம் ஒன்றுமில்லை. முதல் அடிமை யாகிய நானே முழந்தாளிட்டு அவரை வணங்கி னேன். முழு மனதோடு அவர் வாழ-ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். தாங்கள் எதிர்பார்ப்பதுபோல படையில் பலர் சேர்வர்! சந்தேகமேயில்லை. வெற்றிவேலன்: சரி, நான்: என் தங்குமிடத்திற்குச் செல்லவேண்டும்.

பலதேவர்: தங்களுக்காக தெற்கு ராஜ வீதியிலுள்ள தென்றல் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது!. வெற்றிவேலன் : சந்தோஷம் !...