பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 காட்சி 8 மு. கருணாநிதி ஆற்றங்கரையை யடுத்துள்ள சோலைப்புற மாக சுகதேவனும்-திருசங்கும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். 33 திருசங்கு: தம்பி - நீங்கள் வந்ததும் போதும்; அப்பப்பா! அதிலேயிருந்து முத்தாயிக்கு உங்கள் பேச்சேதான் ! சுகதேவ்: அப்படியா? என்ன சொல்லுது! சொல்லுது!. என்ன திருசங்கு: உங்கள் நடையிலே ஒரு வீரம் இருக்கிறதாம். கண பார்வையிலே ஒரு கம்பீரம் இருக்கிறதாம். பேச்சிலே இனிமை இருக்கிறதாம். கையிலே.. என்னமோ இருக்கிறதுன்னு - சொல்லுச்சே..... சுகதேவ் : விரல்! விரல்! திருசங்கு: இல்லதம்பி, வீரல்ல..... சுகதேவ்: நகம்! நகம்!! திருசங்கு: அது இல்லை தம்பி - போங்க நீங்க! எனக் கென்ன இந்த எழவு காதல் வர்ணனை யெல்லாமா தெரிகிறது! சுகதேவ்: அப்படியானால் முத்தாயிக்கு என்மேல் காதல் ! திருசங்கு கண்டதும் காதலென்று கதைகளில் படித் திருக்கிறேன். அதை இப்போதுதான் நேரில் பார்க் கிறேன். சுகதேவ்: ஆகா! உன்னைப்போல ஒரு அப்பனும் அந்த அப்பனுக்கு முத்தாயிபோல ஒருமகளும் இருந்தால்!... உலகம் வெகு விரைவில் காதல் சோலையாக மாறி வீடும் - முத்தாயி! நீயும், நானும்...