பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 இரத்தக் கண்ணீர் சுகதேவ் மெய்மறந்து நின்று விடுகிறான். அதேசோலையில் வேறுபுறத்தில், வீணையும் நாதமும்! விழியும் ஒளியும்! வீரனும் வாளும் ! என்ற வார்த்தைகளை தன் பவள இதழ்களால் பொழிந்தவாறு - முத்தாயி, முத்தனின் யிலே படுத்திருக்கிறாள். மடி முத்தன் : அடுக்கிவிட்டாய் நீ ! ஆனால் என் நம்பிக்கை நாசமாகி விடுமென்று பயப்படுகிறேன். முத்தாயி ஏன்? முத்தன் : நீயாவது அரண்மனைக் காவலாளியின் மகன்! நானோ தாயை இழந்தவன் - தந்தை யாரெனத் தெரி யாதவன் உற்றார் உறவினர் இல்லாதவன் - தனி மனிதன். முத்தாயி: நட்சத்திரங்கள் கூட்டமாய்த்தானிருக்கின் ஆனால் றன. நிலவு தனியாகத்தானிருக்கிறது. அல்லிமலர் எதிர்பார்ப்பது நிலவைத்தானே! மூத்தன்: என் அல்லி ! அரண்மனை குதிரைதேய்ப்பவன் நான்! அங்கே என்னை ஒரு நாயைப்போல் நடத்து கிறார்கள். முத்தாயி: அப்படிச் சொல்லாதீர்கள். அங்கே நாய்க் குக்கூட பட்டுமெத்தை - பாதாம்பருப்பு - பாதுகாக்க பணியாட்கள் - எல்லாவசதியும் உண்டு! முத்தன் : பொழுதெல்லாம் குதிரைக் கொட்டடியிலே கிடக்கும் என்னை உன் அப்பா தினந்தோறும் பார்க் கிறார் - அவரா எனக்கு உன்னை அளிப்பார்! கனவு ! கனவு!