பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 ரத்தக் கண்ணீர் சங்கு இளவரசே! நீங்கள் தவறாக நினைக்காதீகள். என் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரப்பித்திருக் கிறான் - இந்தப் பயல் ஏ! அறிவுகெட்ட பயலே! என்ன காரியமடா செய்தாய். இந்நேரம் நாங்கள் வரவில்லையென்றால் என் குடும்பத்து மானத்தையே கெடுத்திருப்பாயே. என்னடா குட்டிச்சுவர் மாதிரி நிற்கிறாய்! பெண் என்றால் என்ன நினைத்தாய்! சின்னஞ்சிறிய பெண் வெளியே வந்தால் இப்படியா நடந்துகொள்வது நாயே ! உன் கண்ணைக் குத்திப் பெயர்க்கிறேன் பார்! முத்தாயி [திடுக்கிட்டு] அப்பா! திருசங்கு: நீ பயப்படாதேயம்மா! அவன் என்னை யொன்றும் செய்துவிட மாட்டான். சும்மா - பெண் களை மிரட்டுகிற சோம்பேறிப் பயல்! முத்தாயி: இல்லையப்பா! திருசங்கு: எனக்குத்தான் எல்லாம் புரிகிறதே - நீ ஏன் இங்கெல்லாம் தனியாக வருகிறாய்? கடவுளே ! என் பெண் மானத்தைக் காப்பாற்றினாய்! உனக்கு கோடி நமஸ்காரம். முத்தாயி: சொல்வதைக் கேளுங்..... திருசங்கு: ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ போ வீட்டுக்கு... இந்தப் பாவிக்கு நேராக நிற்காதே! போம்மா! போகிறாயா இல்லையா? உம்! போ! போ!' முத்தாயி எதுவும் சொல்லமுடியாமல் போய் விடுகிறாள். தன் தகப்பன் இளவரசன் சுக தேவனுக்கு நேராக தன்னை ஒரு கொய்யாக்கனி என்று நிரூபிக்க மிகவும் அக்கரை யெடுத்துக்