________________
21 மு. கருணாநி கொண்டிருக்கிறான் என்பதை எண்ணி மனதுக் குள் சிரித்தவாறு அவள் போய்விடுகிறாள். 37 திருசங்கு. இளவரசே! பார்த்தீர்களா; இவன் அக்கிர மத்தை. சுகதேவ் : (முத்தனிடம் பாய்ந்து அவன் முதுகில் தட் டியபடி) ஏ, முத்தா? முணுமுணுக்கிறதா முதுகு அரைப்பட்டினி / ஆண்டிப்பயலே ! அனாதைக் கழுதை ! முத்தன் : தீர்ந்ததா அகராதி? சுகதேவ்: பேசாதே பேடி நாயே! முத்தன் : இனிமேல் பேசுவதாக உத்தேசமில்லை. சுகதேவ் : என்னடா நிமிர்ந்து நிற்கிறாய் ! எலும்பை உடைத்து விடுவேன். நெஞ்ச முத்தன் : உடைத்துப்பார்! அப்போதாவது எனக்கும் இருதயம் இருப்பது உனக்குத் தெரியட்டும். சுகதேவ்: ஏ...மரியாதையாகப் பேசு. முத்தன்: மரியாதை மண்ணாங்கட்டியல்லவா மழைக் குப் பயப்படவேண்டும். திருசங்கு: சரிதாண்டா ! அதிகப்பிரசங்கித்தனத்தடலே அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது! முத்தன் : எப்படி முடியும். அதற்குப் பாளையக்காரர் மகனாகப் பிறக்கவேண்டுமே! 333