பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 இரத்தக் கண்ணீர் கும் பிரச்சாரம் செய்யச் சொன்னால் நமது வேலை சுலபமாக முடியும். வெற்றிவேலன் : பொருள் எதுவும் தரவேண்டுமோ- அவர் அருளைப் பெற? வே த ளம்: தரவேண்டியதில்லை, ஏனெனில் அவர் கை யால் தொட்டு பொருளை வாங்கிடமாட்டர். மடால் யத்தில் ஒரு உண்டியல் இருக்கிறது. அதில் போட்டு விடவேண்டும். வெற்றிவேலன் : சபாஷ் ! அப்படியே செய்து விடுவோம். வேதாளம் உனக்கும் சொல்கிறேன் படைக்கு நீ ஒரு ஆளை சேர்த்துக் கொடுத்தால் உனக்கு ஐந்து பொன் ஊதியமாகத் தரப்படும்! மொத்தமாக அல்ல | ஒரு ஆளுக்கு ஐந்து பொன் ! வேதாளம்: தங்கள் சித்தம் அதற்கென்ன இப்போது நான் அச்சாரமா கேட்கப் போகிறேன். வெற்றிவேலன் : ஏன் வாங்கிக் கொள்ளேன். போதே பத்து பொன் தருகிறேன். ஏ-யாரங்கே? பேழையைத் திறந்து பத்து பொன் எடுத்துவா ! வேதாளத்துக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை,