________________
42 இரத்தக் கண்ணீர் தாய் - அவன் சும்மாயிருக்கிறான். சும்மா இருக்கிற வனை வேலையை விட்டு விரட்டவேண்டும் - குதிரைக் குக் கொள் வைக்கவேண்டும். நல்ல நியாயமப்பா இது. சுகதேவ்: அத்தை! நீ யொன்றும் பேசவேண்டாம். நடந்த விஷயம் தெரியமுடியாது. சுகதேவின் தாய்: ஆமாம். சுகதேவ் சொல்வது சரி தான். முத்தனை நம்பக்கூடாது. பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறவன் மிகவும் கெட்டவன். பலதேவர்: சரி, சுகதேவ். உன் இஷ்டப்படியே முத்தனை அரண்மனையை விட்டு விரட்டிவிடு !... பூங்காவனம்: பாவமண்ணா! தாய்தந்தை யில்லாத அனாதை. நம்மை விட்டால் எங்கே போவான். பலதேவர்: பூங்காவனம்--நீ சொல்வது சரிதான். அவன் தாயார் காவேரியம்மர நமது அரண்மனை வேலைக்காரி யாயிற்றே - அவள் சாகும்போது மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என் று சொல்லிவிட்டு செத்தாளே என்பதற்காகத்தான் அந்த முத்தனை இத்தனை நாள் பொறுத்தேன். அவன் நமது மடத்து சாமியாரைப் பற்றியும் - மற்றும் தெய்வீக விஷயங்கள் பற்றியும் தாறுமாறாகப் பேசிவருகிறான் என்று பல நாட்க ளாகக் கேள்விப்படுகிறேன். பூங்காவனம்! உனக் கும் சொல்கிறேன். நீ அவனிடத்தில் இப்படி அடிக் கடி அக்கரை காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை...