________________
44 காட்சி 11 இரத்தக் கண்ணீர் குதிரைக் கொட்டடி முத்தன் குதிரைகளை ஒழுங்காக கட்டி தீனி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்தக் காட்சியை இரண்டு கண்கள் கனிவோடு பார்த்துக்கொண் டிருக்கின்றன. வேலையிலீடுபட்டிருந்த முத்தன் திடீரெனத் திரும்பவே அந்தக் கண்களை சந்தித்துவிடுகிறான். ஆம்-பூங்காவனம் தான் நின்றுகொண்டிருக்கிறாள் - முத்தனைப் பார்த்த படி. முத்தன்: இளைய ராணீ ! என்னவேண்டும் தங்களுக்கு! ... பூங்காவனம்: எதுவுமில்லை முத்தா! உன்னைப் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும். முத்தன் திகைத்து நின்றுவிடுகிறான். அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக திருசங்கு வந்து கொண்டிருப்பதை பூங்காவனம் கவனித்து விடுகிறாள். உடனே முத்தனிடம், பூங்காவனம்: முத்தா! வேலை முடிந்ததும் என் மாளி கைக்கு வந்துவிட்டுப் போ! மறந்துவிடாதே ! அவசியம் வரவேண்டும். என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். முத்தனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உலகமே சுற்றுவது போல் தெரிகிறது. வேலையிலேயே மனம் செல்லவில்லை. அப்படியே நின்ற இடத்தி லேயே முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறான்.