________________
46 காட்சி 12] இரத்தக் கண்ணீர் [பூங்காவனத்தின் மாளிகை அவளுக்கு ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்தாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு பயங் போலத் உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டவள் தோன்றினாள். அவளையறியாமலே ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். விளக்கு மங்கலாக எரிந் கர தது. அதைப் பிரகாசமாகத் தூண்டி விட்டாள். அந்த வெளிச்சத்திலே அவள் கண்களில் நீர் தேங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவளது மாளிகை க கச்சி தமாக அமைந்தது. அதிக ஆடம்பரமில்லாமலும் ஆனால் அலங் காரத்திற்குக் குறைவில்லாமலும் இருந்தது. தந்தத்தினால் ஆன நீண்ட உயரமான முக்காலிகள். அவைகளிலே பீங்கானால் செய்யப்பட்ட அழகான சிலைகள். இரண் புறாக்கள் ஜோடியாக அமர்ந்திருக்கும் அந்த மேர்கன நிலையை எவ்வளவு அழகாக வடித்தெடுத்திருக்கிறான் அந்த சிலையை வார்த்தவன். அதற்கடுத்தபடியாக தூரத்திலே நின்று துள்ளி விளையாடும் கன்றுக் குட்டியும் அதைத் தன் நாவினால் தடவிக் கொடுத்து அன்பு காட்ட முடியா மல் கயிற்றால் கட்டுண்டு தவிக்கும் பசுவும் ஆகா! எத் துணை அபூர்வமான கலைப் படைப்பு. சீன நாட்டுப் பீங் கான் பொம்மைகளின் சிங்காரமே சிங்காரம்! மான் தோலைப் போர்த்திக் கொண்டு ஒரு வேங்கை உட்கார்ந் திருக்கிறது.ஆனால் வேங்கையின் முழு உடலையும் மறைப் பதற்கு போதவில்லை. அப்படி ஒரு பொம்மை அந்த இடத்தை அலங்கரித்து. அந்த உயிர் நிறை சிலைகளை யெல்லாம் பூங்காவனம் எத்தனையோ முறை பார்த்திருக் கிறாள். ஆனாலும் இப்போதும் அவைகளை அவள் பார்த் துக்கொண்டேயிருந்தாள். அவள் கண்கள் அடிக்கடி