பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 49 காட்சி 13 மு.க ண இளையராணி! என்றுமில்லாத இந்த அக்கிரமத் துக்கு எப்படித் துணிந்தாள் ? கல்யாணமே தேவையில்லை யென்று கூறி கன்னிப்பெண்ணாக வாழக் கங்கணம் கட் டியவள் கண்ணா வாராய்!" என்று என்னை அழைக் கிறாள் ! வயதோ-நாற்பது ஆகப்போகிறது. இதுவரை யிலே வைராக்கியத்தைக் காப்பாற்றியவள் "வா அருகே!" என்று ஒரு குதிரைக்காரனைக் கூப்பிடுகிறாள். இப்படிப் பட்டவள் திருமணம் வேண்டாமென்ற காரணம்தான் என்ன? கன்னியா? கள்ளியா? புரியாத புதிர்! கோமா னின் தங்கை -குதிரைக்காரனிடம் கொஞ்சிடத் தாவு கிறாள். ராஜா பர்த்ருஹரி" கதைதான் கேட்டிருக் கிறேன். து அதைவிட வேடிக்கையாயிருக்கிறதே! சரி, சரி- இனி நமக்கு இந்த இடம் பொருத்தமில்லை. இங்கே இனியும் இருந்தால் -அடங்கிக்கிடந்து இப்போது எங்கேயோ அலைமோதும் அவள் ஆசை வெள்ளத்திலே எ ஒரு ஆபத்தான இடத்திற்கு அடித்துக்கொண்டு போகப் படுவான் இந்த முத்தன் | வயிறு வளர்க்க-வாழ்க்கையை நகர்த்த ஒரு இடம் இருந்தது! அதையும் கெடுக்கும் ஆபத்து - அன்பு வடிவத்திலே வந்துவிட்டதே! பூங்காவனம் -ஹஹஹ பூங்காவனத்திலே புயல் புகுந்துவிட்டது. அதன் எதிரே நிற்க நம்மால் முடியா தப்பா முடியாது! முத்தா முழுக்குப் போட்டுவிடு அரண் மனை வேலைக்கு !" பூங்காவனத்திடமிருந்து ஓடிவந்த முத்தன் மன திலே இதுபோன்ற குமுறலும் - கொந்தளிப் வாயிலைத் பும் எழுந்தது. அவன் அரண்மனை தாண்டவில்லை. அப்போது, சுகதேவின் குரல் எழுந்தது.