பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி காட்சி 15] ஊர்மக்கள் 29 53 [மடாலயம் கூடியிருக்கிறார்கள். தளபதி வெற்றிவேலன், மருத்துவர் பூபதி, வேதாளம், மற்றும் பலர் இருக்கிறார்கள். மாய்கைநாத ஸ்வாமிகளின் சொற்பொழிவு நடைபெறுகிறது. சாமியார்: அன்பர்களே ! இதுவரை தளபதி வெற்றி வேலன் படையின் பயன்கள் பற்றி அரியதோர் உரை நிகழ்த்தினார். அவர் சொற்களிலே சுவையும் சூடும் நிறைந்து இறைந்து கிடந்தது. வேங்கை புரத்து அரசு காக்கும் வீரர் முகாமிலே வெற்றி தோளுடையோர் குவியவேண்டும் என அழைத்தார் வெற்றிவேலன். நானும் அதைத்தான் சொல்லப் போகிறேன். பகவான் பரந்தாமன், பார்த்திபனை பாரதப் போரில் கலந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். போர் கூடாது---அது ஒரு வெறி- என்றெல்லாம் போதனை செய்கிறார்களே இன்று. அவர்கள் பகவத்கீதையைப் படிக்கட்டும். போரின் அவசியம்பற்றி அந்தப் புல்லாங்குழலூதி எவ்வளவு கூறியிருக்கிறார் என் பது புலனாகும். கூறியது மட்டுமா - அந்த தீன தயாளனே தேர்ச்சார தியாகவும் அமர்ந்திருக்கிறார். சுப்பிரமணியக் கடவுள் யுத்தகளத்திலேதான் ரத்த வெறிகொண்ட ராக்ஷதர்களை கொன்று குவித்தார். பெண்மக்களும் போரில் ஈடுபட்டனர் புராண காலத் திலே! பாமா படைக்கோலம் பூண்டு நரகாசுரனைக் கொன்றிருக்கிறாள். ஆகவே தெய்வங்களுக்கும் உடன்பாடுடையதுதான் போர் புரிதல் என்னும் திருத்தொண்டு. சிவன் கை சூலமும்--சிவகுமாரனின் வேலும் -- விஷ்ணுவின் சக்கரமும்-எதைக் குறிக்