________________
30 மு. கருணாநிதி தளபதி: பின்னர் சந்திக்கிறேன் ! வருகிறேன். சாமியார்: திருச்சிற்றம்பலம் - அருள் நெறி வாழ்க! சாமியார் தன் பீடத்தருகே வருகிறார். மருத் துவர் பூபதி மட்டும் அங்கேயே அமர்ந்திருக்கிறார். அவரைக் கண்ட சாமியார் திடுக்கிட்டு- 55 55 சாமியார்: என்ன பூபதி! நீர் இன்னும் போகவில்லையா? பூபதி: என்னையே நான் மறந்துவிட்டேன், சாமியாரே! உமது சொற்பொழிவில் உள்ளத்தையே தொலைத்து விட்டேன். வார்த்தைகள் - கள். ஆகா என்ன பொருள் பொதிந்த -67 த்தகைய போதையூட்டும் சொற் சாமியார்: போமய்யா ! உயிரை வாங்காதீர்! பூபதி: போகிறேன்! ஹிUU! "வாளையும் வேலையும் தொடாதே-வைகுந்தவாசனைத் தொ தொழு ! கையிலே கேடயம் ஏந்தாதே கைலாசநாதனின் திருநீரை ஏந்து!” அது எங்கே? இப்போது வளைந்துபோன தோள்களிலே வாகைமாலை யேந்துங்கள். அதற் காகக் கைகளில் வாளேந்துங்கள் !! இது எங்கே? எல்லாம் மாயை! மாயாஜாலம்! இல்லையா சாமியாரே! ஆகா சாமியார்: பூபதி ! போதும். போய் வாரும். பூபதி: புகழ்கிறேன் சாமியாரே ! புகழ்கிறேன். ஆண்டவனே! நீ எது எதற்குத்தான் பயன்படுகிறாய்! உலகத்திலே தோன்றும் மகான்கள் எல்லாம் உன் அவதாரமென்கிறார்கள். பரமாத்மாவாக அவதரித்து பகவத்கீதையை உபதேசித்து அர்ச்சுனனைப் போர் புரியச் சொன்னாய்! பிறகு பகவான் புத்தராகவும் நீயே அவதரித்தாயாம்! போர் புரிவது தீது என்று அசோகனுக்கு நல்வழி காட்டினாயாம்! நீயே முரண்