பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 இரத்தக் கண்ணீர் படும்போது இந்த சாமியார் எம்மாத்திரம்! ஓ மறந்து விட்டேன். இவரும் மகான் ! உன் அவதாரம்தானே! சாமியார் : பூபதி... பூபதி : பொறும் சாமியாரே! போற்றி! போற்றி! எனப் பாடுகிறேன் - பொறுமையிழக்கிறீரே -ஏன்? தளபதி கூறினாரே உம்மிடம்; அதையும் கேட் டேன். உம்போன்ற மகான்கள் ; நாட்டுத்தொண்டு செய்யவும் வேண்டும் என்றார்! வேண்டாமய்யா வேண்டாம். இந்த அடிமை நாட்டு மக்கள், பாவம் - நன்றாயிருக்கட்டும்/ நேரடியாக உமது தேசத் ண்டை அவர்கள் அனுபவிக்க வேண்டாம்! அருள்நெறி வாழ்வது உம்மோடு இருக்கட்டும். சாமியார்: சாது மிரண்டால் காடு கொள்ளாது - பூபதி! பூபதி : மிரள்வது சாது அல்ல ! சூது! வாது! தீது! இவைகள் தான் மிரள்கின்றன. Cal த சாமியார்: நமக்குள் என்னய்யா இப்படி வம்பு ! பூபதி : நமக்குள் என்ன-அந்த ரகசியத்தை சொல்லி விடுமே. சாமியார் : பூபதி-உம்மைக் கும்பிடுகிறேன். போய் விடும் ! பூபதி: போகிறேன்-ஆனால் சாமியாரே ! நினைவிருக் கட்டும்; பொய் கொஞ்சம் கொஞ்சமாகப் போதாகி மலரும் ! ஆனால் உண்மை திடீரென வெடித்துவிடும்! ஹ ஹ ஹ வருகிறேன். பூபதி போகிறார் - சாமியார் பெருமூச்சு வீட்டு பீடத்தில் உடலைப் போடுகிறார்.