பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5 நுழைவாய் வேங்கை நகர் சிற்றரசின் ஆதிக்கம் பரவி யுள்ள பகுதி. அந்தப் பகுதியிலே பல பாளையக் காரர்கள் தங்களின் பலமிழந்து - படையிழந்து கூட்டுக்குள் அடங்கிய கோழிகள் போல தங் கள் கோட்டைக்குள் அடங்கிக் கிடந்தார்கள். அவர்கள் வாழும் ஊர்களிலும், அதைச் சார்ந்த டங்களிலும் வரி வசூலித்து சிற்றரசனுக்கு அனுப்பிவைக்கவும் சிற்றரசன் நடத்தும் வேடிக்கை விழாக்களிலே கெளரவமாகக் கலந்து கொள்ளவும், சிற்றரசு தரும் சலுகைகளைக் கொண்டு தன்னூர் மக்களை மிரட்டி வாழவும் மட்டுமே உரிமை பெற்றவர்களா யிருந்தார்கள். அத்தகைய பாளையக்காரர் ஊர்களிலே ஒன்று தான் பழுதூர். பெயரிலேயே அடங்கிக்கிடக் கிறது அதன் வளம். பழுதூர் பாளையக்காரர் ஒருகாலத்திலே ஏற்றம் பெற்றிருந்தார். எந்த சிற்றரசர்களாலும் அடக்கியாளமுடியாத அந்த வீரரை வேங்கை நகர் சிற்றரசு வெற்றிகண்டு விட்டது. தோல்வியைத் தாங்கமுடியாமல் பாளையக்காரர் தன்னுயிரை மாய்த்துக் கொண் டார். அவருக்குப் பின் அவரது மகன் வேங்கை நகருக்கு அடங்கி வாழ உறுதியளித்து தனது படைகளை யெல்லாம் கலைத்துவிட்டு பழுதூரில் ஆதிக்கம் செலுத்துவதை மட்டும் தன் வசம் வைத்துக்கொண்டார். அவரது பெயர்தான் பலதேவர்.