பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 காட்சி 17] இரத்தக் கண்ணீர் (தென்றல் மாளிகை. வெற்றிவேலன் முன்னிலையில், படைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். வேதாளமும் அங்கே இருக்கிறான். படையில் சேருபவர் பலர் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவ ராக சோதனை செய்யப்பட்டு படையில் பதிவு செய்யப் படுகிறார்கள். ஒரு வாலிபனின் தோளை தட்டியபடி. வெற்றிவேலன்: திடமான தோள்கள் உனக்கு -நீ விரை வில் என்னைப்போல் ஆகிவிடலாம். உன் பெயர் என்ன சொன்னாய்; வீரப்பனா ? சபாஷ் !- இன்னொருவனைக் காட்டி: வேதாளம்: இவன் நெஞ்சு மிகவும் உறுதியானது. உனக்குப் படையிலே ஊதியம் மாத்திரமல்ல: பரிசு கள், பதக்கங்கள் எல்லாம் ஏராளமாகக் கிடைக்கும். அவன்: சரிதான்; அய்யா அஞ்சல் மனை வேலையை விட்டு விட்டு, ஆருடம் பார்த்தா நல்ல வரும்படி வரும். அவனை, வெற்றிவேலன் தட்டிக்கொடுத்து, வெற்றிவேலன் : சபாஷ் ! சாமர்த்தியமான பேச்சுக் காரன். சைன்யத்திலே சரியான புகழ் இருக்கிறது இவனுக்கு! இன்னொருவனைக் காட்டி, அவன் தலையைத் தடவியபடி. வேதாளம்: தம்பிக்கு நூறு அடி விழுந்தாலும் நொறுங் காது தலைக்கனம் அதிகம்!