பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 இரத்தக் கண்ணீர் முத்தாயி: பிறகென்ன கவலை ... இதைச் சாப்பிடுங்கள். கையிலுள்ள பொட்டலத்தை அவிழ்த்து, தின்பண்டங்களை நீட்டுகிறாள். முத்தன் : எனக்கு ஒன்றும் வேண்டாம். முத்தாயி: உடம்புக் கென்ன? வேலை போய்விட்ட தென்று கவலையா? போனால் போகிறதே; இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்கலாம் அல்லவா? முத்தன் : சந்திக்க முடியாது. முத்தாயி: ஏன், அன்று நடந்தது போல் நடக்குமென்ற பயமா ?அதற்கெல்லாம் துணிந்து விட்டேன். முத்தன் : தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். தந்தையை என்னால் எதிர்க்க முடியாது. உன் முத்தாயி: அரண்மனையில் அலுவல் பார்க்கிறார் என்ப தாலா? முத்தன் : இல்லை. அவர், குயில் கூவ வேண்டிய இடம், குளிர்மலர்ச் சோலை யென்கிறார் ! நான் இல்லை. குட்டிச் சுவற்றில்" என்று கூற முடியுமா ? முத்தாயி: நம்ப முடியாது. அவர் உங்களை குளிர்மலர்ச் சோலையென்று கூறியிருக்கமாட்டார். முத்தன் : என்னைச் சொல்ல அவருக்கென்ன பைத் தியமா? எனக்கே தெரியுமே நான் சோலைவன மல்ல; பாலைவன மென்று! முத்தாயி: நீங்கள் பாலைவன மானால் நான் அதிலே வளரும் பேரிச்சை மரம்.