பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 ரத்தக் கண்ணீர் டியவள், அவள் எண்ணத்தை விட்டுவிடு என்றான். காதல் முத்தனோ கண்ணீர் விட்டான். கரகரத்த குரலிலே, கம்மிய தொனியிலே, ஏழை முத்தன், கட் டளையிட்டான், முத்தாயியை மறந்துவிடு என்று! மறந்துவிட்டேன் என் சிங்காரியை மறந்துவிட் டேன். என் சிந்தையில் குடியேறிய செல்வத்தை மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன். நான் முத்தாயி: மறப்பீர்கள். ஏன் மறக்கமாட்டீர்கள்! மனம் சூன்யமாகப் போய்விட்டால், உணர்ச்சியற்ற மரக்கட்டையாக மாறிவிட்டால் மறப்பீர்கள். மறக் கிறேன் என்று சொல்லாதீர்கள்-மனதார நம்பிய வளை மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் மறக்கும்படியாக என்ன குற்றம் செய்துவிட்டேன்-பேராசைக்கார தகப்பனுக்குப் பெண்ணாகப் பிறந்ததைத் தவிர! காதல் என்றால் என்ன, கண்டவர் உருவத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியா காதல்? கலைத்து எழு தும் சித்திரமா? அழியாத ஓவியம் - அசையாத யம் - காதல் என்று எண்ணியிருந்தேனே. அது பைத்தியக்காரத்தனந்தானா? நிலையில்லா செல்வத் திலே நீந்தி விளையாடு என்று எனக்கு நீதி போதிக் கிறீர்களே. சந்தைப் பொருளென என்னை எண்ணி விட்ட தந்தைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தி யாசம்? ஏன் சிலையாக நின்றுவிட்டீர்கள்? முத்தன் : முத்தாயி! ம முத்தாயி: காதலன் மறந்துவிட்டான் - காதலி வேறிடம் பறந்துவிட்டால் என்று என் சரித்திரம் முடியாது துரையே ! அவள் வாழ்வைத் துறந்துவிட்டாள்- என்றுதான் முடியும் - சம்மதம்தானா? அப்படியானால் ?