பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 இரத்தக் கண்ணீர் வேற்றிவேலன்: என்ன செய்யலாம். வேதாள ளம்: காவலில் போடுங்கள். கழுதையை !- ஆனால் ஒன்று. நான் இந்த நாய்க்குட்டியிடம் நல்லவன் போல நடந்துகொள்கிறேன். அதாவது நடிக்கிறேன் என்கிறேன். பிறகு இருவரும், முத்தன் இருக்குமிடத் திற்கு வருகிறார்கள். வரும்போதே. வேதாள நளம் : தயவு செய்து மன்னித்து - முத்தனை விட்டு விடுங்கள். அவன் ஏழை. வெற்றிவேலன்: ஓய் வேதாளம் ! திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். நீர் இதில் தலையிடக்கூடாது. வேதாளம்: ஏன் தலையிடக்கூடாது! உங்களுக்குத் தர வேண்டிய நூறு பொன்னைக் கொடுத்து விட்டால்- முத்தனை நீங்கள் என்னசெய்ய முடியும்? என்ன முத்தா! நூறு பொன் தயார்தானே? முத்தன்: தயார்தான். காலையில் கொடுத்துவிடுகிறேன். வேதாளம்: காலையிலா?... அதுவும் சரி ! தளபதி அவர்களே ! முத்தன் போகலாமல்லவா? வெற்றிவேலன் : கூடாது. தண்டப் பொன்கள் வந்து சேரும் வரையில் இவன் காவலில் இருக்க வேண்டும். ஏய், யாரங்கே?... இவனைக் காவலில் வையுங்கள்.. வேதாளம்: அய்யோ!... பெருமைக்குரிய பிரபு அவர் களே! அவனை விட்டு விடுங்கள். நானே, நாளை காலையில் பொன்களைத் தந்துவிடுகிறேன். வெற்றிவேலன்: முடியாது! வெற்றிவேலன் உத்திர வீடுகிறேன். குறுக்கே நிற்காதீர் நீர் !