பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 23] மு. கருணாநிதி 43 81 (தென்றல் மாளிகை. தென்றல் மாளிகையில் முத்தன் அடை பட்டுக் கிடக்கிறான். கூண்டினில் புலிபோல அங்கு மிங்கும் உலவுகிறான். அப்போது வேதா ளம் அங்கே நுழைகிறான். முத்தன், வேதாளத் தை ஆவலுடன் பார்க்கிறான். வேதாளம்: முத்தா!... என்ன முட்டாள் தனம் செய்து விட்டாய்... முதலிலேயே யோசித்து செய்யக்கூடாது நான் என்ன, உன்னை பலவந்தமாகவா படையில் சேர்த்தேன். வெற்றிவேலன் ஒரு முரடன்...நீயோ பாவம், மிகவும் நல்லவன். நியாயப்படி உன்னைக் காவலில் வைக்கக் கூடாது! இந்த அநியாயத்தை யார் கேட்பது. பாளையக்காரரிடம் ஓடிப்போய் சொன்னேன். என் பேச்சை லட்சியம் செய்யவே இல்லை. ஏழையின் குரல் ஏழடுக்குமாளி கையில் எப்படிக் கேட்கும்? அவர் அப்போது வெற்றிவேலன் அங்கு வருகிறான். வெற்றிவேலன்: என்ன வேதாளம். என்ன அளக் கிறீர்? முத்தனை நீர் பார்த்து விட்டுத்தான் போக லாம்: ஆசையிருந்தால்! அவனுடன் பேசுவதற்கு உமக்கு அனுமதியில்லை. அவன் இப்போது கூண்டுப் பறவை. நினைவிருக்கட்டும்! வேதாளம்: முத்தன் என்னுடனேயே இருந்தவன் பிரபு! மேன்மை தாங்கியவரே! பழகிய பாசம் மிகவும் பொல்லாதல்லவா? இவனை எப்படியாவது மன்னித்து... வெற்றிவேலன்: ஹஹஹ! மன்னிப்பதா? இதோ பாரும் அரசாங்க உத்திரவை! இதுவரை சேர்ந்