பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 இரத்தக் கண்ணீர் துள்ள படைவீரர்களோடு நான் உடனே தலைநகருக் குப் புறப்பட வேண்டுமென்று கட்டளை யனுப்பி யிருக்கிறார் மன்னவர்! இன்றே புறப்பட வேண்டும். வேதாளம்: முத்தனுமா? வெற்றிவேலன் : ஆமாம் ! ஆனால், தண்டப் பணம் நூறு பொன் வந்துவிட்டால் இவன் விடுதலை பெற லாம். இவனுக்கேது நூறு பொன் -குப்பையில் கிடப்பவன்? வெற்றிவேலன் போய்விடுகிறான். வேதா ளம், முத்தனை மிகவும் சோகமுடன் பார்ப்பதாக நடிக்கிறான். முத்தனும் வேதாளத்தை நம்பு கிறான். வேதாளம்: முத்தா! உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமா யிருக்கிறது. G முத்தன்: அய்யா, ஒரு உதவி செய்யுங்கள். வேதாளம்: என்ன உதவி? சொல்! செய்து முடிக் கிறேன். முத்தன் : என்னிடம் கொடுக்கச்சொல்லி, நூறு பொன் தங்களிடம் வரும் - அதை வாங்கி கட்டி - என்னை விடுவித்து விடுங்கள்! வேதாளம்: அதைவி- எனக்கு வேறு வேலை . பொன் கட்டாயம் வருமல்லவா? முத்தா ! இனிப் பயமில்லை நீ கவலையில்லாமல் இரு ! எது நடந்தாலும் சரி ... பொன் வரட்டும்---எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். வேதாளம், அதைவிட்டு வெளியே போகி றான். கதவு பூட்டப்படுகிறது. முத்தன், கூண்டுக்குள் மீண்டும் அலைந்துகொண்டிருக் கிறான்.