________________
மு. கருணாநிதி காட்சி 24] முரட்டு மனிதன். -- - அஞ்சலோடி, குதிரை 44 83 [அஞ்சல்மனை வாயில் தேய்த்துக் கொண்டிருக்கிறான். அங்கே சுமதி கையிலே பொன் மூட்டையுடன் வருகிறாள். சுமதி: அய்யா ! அஞ்சலோடி: என்னம்மா வேண்டும்? சுமதி: முத்தன் இங்கில்லை? அஞ்சலோடி : முத்தனா? அவன் மிகவும் நல்லவனா யிற்றே, அவனை ஏன் நீ தேடுகிறாய் - நீ அவனைக் காதலிக்கிறாயா? சுமதி: போக்கிரி மனிதா ! கேட்டதற்கு மட்டும் பதில் சொல். அஞ்சலோடி: அவன் தென்றல் மாளிகையில் இருக்கிறா னாம அவனுக்கென்ன, போர்வீரன். அவனுக்குத் தகுந்தவள் தான் நீ .... சுமதி: மூடிக்கொள் உன் அழகான வாயை! அப்பனே! அஞ்சலோடி : மகளே ! சுமதி: முத்தன் தவறி இங்கு வந்தால், ஒரு பெண் தேடிக்கொண்டு தென்றல் மாளிகைக்குப் போயிருப் பதாகச் சொல்! அஞ்சலோடி: இது உத்திரவா? வேண்டுகோளா? சுமதி: இரண்டுந்தான்- சரியான முட்டாள்! [போகிறாள்] அஞ்சலோடி: என்ன என்ன? ஏ. சிட்டுக் குருவி- இப்போது என்ன பேசினாய்? சுமதி: தமிழ் பேசினேன் வருகிறேன். ஏ. தலைவலி / போய் சுமதி வேகமாக அதைவிட்டுப் போகிறாள். அவள் போவதையே அஞ்சலோடி பார்த்துக் கொண்டு நிற்கிறான்.